என்னது! நடிகை சமந்தா இவருக்கு அக்காவாக நடிக்கவுள்ளாரா? வெளியான புதிய தகவல்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
Rashmika mandana going to act as younger sister to samantha

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு மொழிகளிலும் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அடுத்ததாக சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கேம் ஓவர் பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் பெண்களை மையப்படுத்தி உருவாகவிருக்கும் படம் ஒன்றில் நடிகை சமந்தாவுக்கு தங்கையாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
வளர்ந்து வரும் நாயகியான ராஷ்மிகா அடுத்ததாக புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சுல்தான் திரைப்படம் மூலம் தமிழிலும் அறிமுகமாகவுள்ளார்.