போலி ஆபாச வீடியோ உருவாக்கியவர்களுக்கு அறிவுரை கூறி உண்மையான வீடியோவை பதிவிட்ட ரஷ்மிகா மந்தானா..
போலி ஆபாச வீடியோ உருவாக்கியவர்களுக்கு அறிவுரை கூறி உண்மையான வீடியோவை பதிவிட்ட ரஷ்மிகா மந்தானா..
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தானா. இவர் தெலுங்கில் ஒரு சில ஹிட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழிலும் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. தமிழ், தெலுங்கு தொடர்ந்து தற்போது இந்தியிலும் திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் ராஷ்மிகா மந்தானா போன்று சித்தரிக்கப்பட்டது ஆபாச வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்டித்து பல திரை பிரபலங்கள் இணையத்தில் பதிவு செய்தனர்.