தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே.. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு இப்படியொரு பிரச்சினை இருந்ததா.! உடல் எடை அதிகரிக்க அதுதான் காரணமா??

அடக்கொடுமையே.. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு இப்படியொரு பிரச்சினை இருந்ததா.! உடல் எடை அதிகரிக்க அதுதான் காரணமா??

Raveendar shares his weight increase reason Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர். அவர் நட்புன்னா என்னா தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை  தயாரித்துள்ளார். மேலும் இவர் பிக்பாஸ் விமர்சகராக இருந்து பிரபலமானவர். இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

அவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. மேலும் பலரும் ரவீந்தர் உடல் எடை அதிகமாக இருந்தபோதும், நடிகை மகாலட்சுமி அவரை பணத்திற்காகதான் திருமணம் செய்து கொண்டார் என விமர்சனம் செய்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

Raveendar

இந்த நிலையில் சமீபத்தில் ரவீந்தர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது உடல் எடை அதிகரித்ததற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, எனது உடல் எடை எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பது வித்தியாசமான விஷயம் கிடையாது. நான் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கையில் அலர்ஜி ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை எடுத்துதான் எனது உடல் எடை அதிகரித்தது.

அலர்ஜிக்காக நான் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டேன். மாத்திரையில் உள்ள போதை உடம்பில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் செல்களை இல்லாமல் செய்துவிட்டது. இது பரம்பரை வியாதி கிடையாது. நான் டயட் இருப்பது கிடையாது. இன்று இதை சாப்பிடக்கூடாது எனவும் யோசித்தது இல்லை. தினமும் 200 கிலோ வெயிட்டை சுமந்து கொண்டு நடக்கிறேன். அது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது என உருக்கமாக கூறியுள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Raveendar #weight increase #Reason
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story