நயன்- விக்கி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த திருப்பதி! என்ன காரணம்! வெளிவந்த ஷாக் தகவல்!!
நயன்- விக்கி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த திருப்பதி! என்ன காரணம்! வெளிவந்த ஷாக் தகவல்!!
தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தபோது அதன் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். அதனைத் தொடர்ந்து இருவரும் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
மேலும் விழாக்களை ஒன்றாக கொண்டாடுவது, வெளிநாடுக்கு சுற்றுலா செல்வது என நெருக்கமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் பரவியது. இதற்கிடையில் அவர்களது திருமண பத்திரிக்கை ஒன்றும் இணையத்தில் வைரலானது.
அதில் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் முதலில் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் திருமணத்தில் இருவீட்டார் தரப்பிலிருந்தும் 150 பேருக்கு மேல் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டதால் அதற்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதி தர மறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. பின்னரே அவர்கள் திருமணம் நடைபெறும் இடத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.