வாரிசு நடிகர் செய்த செயலால் பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஸ்ரீ திவ்யா.!
வாரிசு நடிகர் செய்த செயலால் பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஸ்ரீ திவ்யா.!
2013ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. கேரளாவைச் சேர்ந்த இவர் தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஜீவா, விஷ்ணு விஷால் என தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யா, சமீபமாக எந்தப் பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்து வருகிறார். கடந்த ஆறு வருட காலமாக எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வாரிசு நடிகர் ஒருவர் ஸ்ரீதிவ்யாவை அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்ததாகவும், அதற்கு ஸ்ரீதிவ்யா மறுத்ததால் கடுப்பான அந்த நடிகர், ஸ்ரீதிவ்யாவின் பட வாய்ப்புகளை முற்றிலுமாக குறைத்து விட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது.
கடந்த ஆறு வருட காலமாக நடிக்காமல் இருந்து வந்த ஸ்ரீதிவ்யா, தற்போது விக்ரம் பிரபுவுடன் "ரெய்டு" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஸ்ரீதிவ்யாவுக்கு இரண்டாவது இன்னிங்சாக இருக்கும் என்றும், நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.