விடுதலை இரண்டாம் பாகம் வெளியாவதில் மீண்டும் தாமதம்.? என்ன காரணம்.!
விடுதலை இரண்டாம் பாகம் வெளியாவதில் மீண்டும் தாமதம்.? என்ன காரணம்.!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "விடுதலை". இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முன்னணிக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கெளதம் மேனன் உட்பட பலரும் நடித்திருந்தனர்.
திரில்லர் படமான "விடுதலை" எழுத்தாளர் ஜெயமோகனின் "துணைவன்" சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.
மேலும் இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது கவனிக்கத்தக்கது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது.
2024ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அன்று இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால் 2024ம் ஆண்டு கோடை விடுமுறையில் தான் விடுதலை இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.