×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மாடியோவ்.. நயன்தாரா திருமணம் நடந்த நட்சத்திர ஹோட்டலில் ஒரு இரவுக்கு வாடகை இத்தனை லட்சமா??

அம்மாடியோவ்.. நயன்தாரா திருமணம் நடந்த நட்சத்திர ஹோட்டலில் ஒரு இரவுக்கு வாடகை இத்தனை லட்சமா??

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ஒருவழியாக இருவருக்கும் நேற்று மகாபலிபுரத்தில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் சினிமா உலகின் பிரபலங்கள் பலரும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்களது திருமண நிகழ்ச்சி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதால் திருமணத்தில் பங்கேற்றவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தங்களது திருமண புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெற்ற நட்சத்திர ஹோட்டலின் வாடகை குறித்த தகவல் வெளியாகி ஷாக் கொடுத்துள்ளது. அதாவது நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் 3 நாட்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு இரவுக்கு 1. 30 லட்சம் என வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு திருமண விருந்தாக 27 வகை உணவுகளும் பரிமாறப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 நாளைக்கு வாடகைக்காக 4.30 லட்சம் வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #Vignesh Shivan #hotel
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story