இடுப்பில் டாட்டூ! ரசிகர் கேட்ட அந்த கேள்விக்கு, ரேஷ்மா சொன்ன பதில்! வைரலாகும் வீடியோ!!
இடுப்பில் டாட்டூ! ரசிகர் கேட்ட அந்த கேள்விக்கு, ரேஷ்மா சொன்ன பதில்! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரேஷ்மா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதற்கு முன் நடிகை ரேஷ்மா சன்டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். மேலும் வம்சம், மரகத வீணை, பகல் நிலவு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரிடம் ரசிகர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்பொழுது ரசிகர் ஒருவர், அவரது இடுப்பில் இருக்கும் டாட்டூ குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ரேஷ்மா, அந்த டாட்டூவை முழுவதுமாக பார்த்திருக்க முடியாது. ஏனென்றால், அது கொஞ்சம் பெரிய டாட்டூ. இரு அழகான ரோஜாக்கள்தான் அது. romanceக்காகதான் நான் அதை போட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.