காதல் திருமணம்..! சில நாளில் விவாகரத்து..! 52 வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல தமிழ் நடிகை..!
revathi give birth to girl baby by test tube
நடிகை ரேவதி குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என கூறப்பட்ட நிலையில்,5 வருடங்களுக்கு முன்னால் டெஸ்ட் டியூப் மூலம் ரேவதி பெண்குழந்தையை பெற்றெடுத்தார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் மண்வாசனை படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேவதி. அதன்பின் தமிழ்,மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் அவரது படங்கள் மற்றும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.
இந்நிலையில் ரேவதி புதியமுகம் படத்தில் நடித்தபோது அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனன் என்பவரை காதலித்து,திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.பின்னர் ரேவதி தனிமையாக வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டு டெஸ்ட் டியூப் மூலம் பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். தற்போது அது வெளியே தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பிரபல வார இதழ் ஒன்றிற்கு ரேவதி அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் வாழ்க்கையில் பல பிரச்சினைகளையும்,சவால்களையும் கடந்து வந்துள்ளேன்.
தனிமையில் வாடிய நான் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன்.அவள் பெயர் மஹி.
மேலும் அவளை நான் தத்தெடுத்து வளர்ப்பதாக பல்வேறு வதந்திகள் பரவியது. இது உண்மை கிடையாது. என்னுடைய குழந்தைக்கு தற்பொழுது ஐந்து வயது ஆகிறது .அவள்தான் என் உலகம்,சந்தோசம் எல்லாமே..என கூறியுள்ளார்.