என்னது.. இதனால்தான் ராஜாராணி 2 தொடரிலிருந்து விலகினாரா?? தீயாய் பரவிய தகவல்.! உண்மையை உடைத்த ரியா!!
என்னது.. இதனால்தான் ராஜாராணி 2 தொடரிலிருந்து விலகினாரா?? தீயாய் பரவிய தகவல்.! உண்மையை உடைத்த ரியா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் ராஜாராணி 2. ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது மனைவியின் கனவை இனிப்பு கடை நடத்தி வரும் ஹீரோவான கணவர் பல தடைகளை மீறி நிறைவேற்ற போராடுவதே இதன் கதையாகும். இதில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் சித்து நடித்து வருகிறார். மற்றும் சந்தியா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக முதலில் ஆலியா மானசா நடித்தார்.
ஆனால் அவர் கர்ப்பமான நிலையில் பாதியிலேயே தொடரிலிருந்து விலகினார். அவரை தொடர்ந்து ரியா விஸ்வநாதன் ராஜாராணி 2 சீரியலில் புதிய சந்தியாவாக நடித்தார். இந்த நிலையில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும் அந்த தொடரில் இருந்து தான் விலகுவதாக ரியா அண்மையில் சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து தற்போது புதிய சந்தியாவாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்த ஆஷா கவுடா நடித்து வருகிறார் இந்நிலையில் ரியா தொடரில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மேலும் அவருக்கு திருமணம் நிச்சயமானதால்தான் அவர் தொடரில் இருந்து விலகிவிட்டதாகவும் பல தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ரியாவிடம் கேட்ட நிலையில், அவர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அது போலியான வதந்தி. 2 மற்றும் 3 வருடங்களுக்கு இடையே எனக்கு திருமணம் செய்யும் திட்டமில்லை என அதற்கு மறுத்துள்ளார்.