பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! மாப்பிளை யார் தெரியுமா?
Richa gangopadhyay announced her marriage with joe
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா காங்கோபாதியாய். படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் தனது முதல் படத்திலையே பிரபலமானார் நடிகை ரிச்சா காங்கோபாதியாய்.
மயக்கம் என்ன படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஒஸ்தி படம் மாபெரும் வெற்றிபெற்றாலும், இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வர முடியவில்லை. மேலும், அதன்பிறகு இவரை எந்த தமிழ் சினிமாவிலும் காண முடியவில்லை.
இந்நிலையில் தனக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்றும், ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எம்பிஏ படித்துள்ள ரிச்சா, பிசினஸ் ஸ்கூல் ஒன்றில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் வெளிநாட்டைச் சேர்ந்த ஜோ என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
இன்னும் திருமணத்திற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை என்றும், விரைவில் திருமணம் என்றும் கூறியுள்ளார் ரிச்சா.