காதலனை கரம் பிடித்த ஒஸ்தி பட நடிகை! அழகிய ஜோடியின் திருமண புகைப்படம் இதோ!
Richa gangopadhyay marriage photos
தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். மயக்கம் என்ன திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து சிம்புவுக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நாயகியாக நடித்தார்.
ஒஸ்தி படம் மாபெரும் வெற்றிபெற்றிருந்தாலும், அந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. அதனை அடுத்து ஒருசில பெங்காலி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துவந்தார். அதன்பிறகு சினிமாவை விட்டு விலகிய இவர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்துவந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் பெங்காலி மற்றும் அமெரிக்க முறைப்படி திருமணம் நடைபெற்றது. தற்போது அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைராலகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.