பார்ப்பதற்கு நடிகர் சூர்யாவை போல் தோற்றம் அளிக்கும் விஜய் பட நடிகர்! வைரலாகும் புகைப்படம்.
Rinson vijay
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் ரின்சன். இவர் இதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 1 என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு தளபதியுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ரின்சன் தாடியுடன் பார்ப்பதற்கு நடிகர் சூர்யாவை போலவே தோற்றம் அளிக்கிறார்.