பீச்சில் ரியோவின் காலைப் பிடித்து கெஞ்சிய பிரபல நடிகை! காதலர் தினத்தன்று வைரலான பரபரப்பு வீடியோ!!
பிரபல தொகுப்பாளராக இருந்து பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தி
பிரபல தொகுப்பாளராக இருந்து பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரியோ. இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற அவர் மூன்றாவது இடத்தை பெற்றார். ரியோ அடுத்ததாக இயக்குனர் பத்ரி இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு பாடல் வீடியோ ரியோ பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது வெளியானது.
இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அதன் ஸ்பெஷலாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் கடற்கரை காட்சி ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஹீரோயினான ரம்யா நம்பீசன் ரியோவிற்கு காதலை சொல்லும் போது அவர் கறாராக நோ சொல்கிறார். அப்பொழுது ரம்யா அவரது காலில் விழுகிறார். இந்த காட்சியை ரியோ காதலர் தினத்தன்று, காதலை விட நமக்கு கடமை தான் முக்கியம் என கேப்ஷன் கொடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.