எதற்காக இந்த பப்ளிசிட்டி! நடிகை ரித்விகா பதிவிட்ட ட்வீட்டை பார்த்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!
Rithika Twitter
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரித்விகா. அவர் நடித்த முதல் படத்தின் மூலமே புகழின் உச்சிக்கு சென்றார் ரித்விகா.
அதனை தொடர்ந்து பரதேசி, ஒரு நாள் கூத்து, இருமுகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின் இவர் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். அதன் பிறகு விஜய் டிவி அவரை பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுத்தனர். அதிலும் அவர் கலந்து கொண்டார்.
அதுமட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை வென்று பிக்பாஸ் டைட்டில் என்ற பட்டத்தையும் தட்டி சென்றார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது சில தினங்களுக்கு முன்பு இவர் உபர் நிறுவனத்திலிருந்து கார் ஒன்றை புக் செய்து பயணித்துள்ளார்.
அப்போது அந்த காரின் டிரைவர் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக கோபத்துடன் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் எதற்காக இந்த பப்ளிசிட்டி, ola விடம் காசு வாங்கி விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.