நான் தலைமறைவாகிட்டேனா.! ஆருத்ரா பண மோசடி.! விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஆர்.கே சுரேஷ்!!
நான் தலைமறைவாகிட்டேனா.! ஆருத்ரா பண மோசடி.! விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஆர்.கே சுரேஷ்!!
ஆருத்ரா கோல்ட் நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூபாய் 2438 கோடி பணம் வசூலித்து மோசடி செய்தது. இந்நிலையில் இந்த மோசடியில் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. துபாயில் தலைமறைவானார் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே சுரேஷ் நேற்று முன்தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். அவரிடம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, தான் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராக வந்திருப்பதாக கூறியுள்ளார் பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்கே சுரேஷ் சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். அதற்கு முன்பு அவரிடம் செய்தியாளர்கள் தலைமறைவானது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு அவர், நான் தலைமறைவாகி விட்டேனா? எல்லாமே இங்கு இருக்கும்போது நான் ஏன் தலைமறைவாக வேண்டும். வந்து பேசுகிறேன் என கூறிவிட்டு விசாரணைக்கு சென்றுள்ளார்.