யார் யாரோ கூப்டாங்க நடிக்க! ஆனால் அட்லீ, விஜய் கூப்பிட்டதும் ஓகே சொல்லிவிட்டேன்!
Robo sankar daughter acting in vijay movie
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான சர்க்கார் திரைப்படம் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்தது.
தற்போது அட்லீயுடன் இணைந்துள்ளார் விஜய். ஏற்கனவே தெறி, மெர்சல் என பிரமாண்ட படங்களை கொடுத்த இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தளபதி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படமாக இருக்கும் என செய்திகள் வெளியாகின.
அதுமட்டும் இல்லாமல், 16 பெண்கள் படத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தற்போது விஜயின் படத்தில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் நடிக்கவுள்ளதாக ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கூறிய அவர், எனது மனைவியும், மகளும் இரவு நேரங்களில் டிக் டாக் வீடியோ செய்வார்கள். அவர்களை நான் பலமுறை திட்டியுளேன். ஆனால், அந்த வீடியோவில் ஒன்றை பார்த்துதான் அட்லீ எனது மகளை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னர் எத்தனையோ படங்களில் நடிக்க என் மகளை அழைத்தார்கள். ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் விஜய் - அட்லீ படத்தில் நடிக்க கூப்பிட்டால் முடியாதுனு சொல்ல முடியுமா! அதான் ஓகே சொல்லிவிட்டேன் என்று புன்னகையுடன் கூறினார் ரோபோ சங்கர்.