பிகில் ட்ரைலர் பார்த்துவிட்டு கண்ணீர் சிந்திய ரோபோ சங்கர்! என்ன காரணம் தெரியுமா?
Robo sankar twits about bigil trailer
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார் பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், மேயாத மான் இந்துஜா, பரியேறும் பெருமாள் கதிர் போன்றோரும் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளும் நடித்துள்ளார்.
தனது மகள் பிகில் படத்தில் நடித்துள்ளது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுல ரோபோ சங்கர் கூறியிருப்பதாவது, பிகில் ட்ரைலர் காட்சியில் மகளைப் பார்த்து கண்ணில் கண்ணீர் வழிந்தது. என் மகளுக்கு இப்படியொரு வாய்ப்பை கொடுத்ததற்கு விஜய் சாருக்கும், அட்லீ சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். ட்ரைலர் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.