ஆத்தாடி! ரோபோ சங்கர் மகளோடு போடும் கலக்கலான குத்தாட்டத்தை பார்த்தீர்களா! இணையத்தை கலக்கும் தெறி வீடியோ
Robo shankar dance with daughter
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையான பேச்சால் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
மேலும் அவர் தீபாவளி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி போன்ற பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரோபோ ஷங்கர் சமீபத்தில் தனது மகளுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் பிகில் படத்தின் பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.