அட.. தடபுடலான ஏற்பாடுகள்! ரோஜா சீரியல் நடிகைக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு விழா!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் ரோஜா. இந்தத் தொடருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இத்தொடரில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு சூரியன் மற்றும் ரோஜாவாக பிரியங்கா நல்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்தத் தொடரில் அனுவாக பயங்கர வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்தவர் ஷாமிலி சுகுமார். ரோஜா சீரியலின் வெற்றிக்கு அவரும் முக்கிய காரணமாக இருந்தார். அவர் நெகடிவ் ரோலுக்கு ஏற்ப கச்சிதமான தனது நடிப்பை வெளிக்காட்டி இருந்தார். இந்த நிலையில் நடிகை ஷாமிலி கர்ப்பமாக இருந்ததால் பாதியிலேயே சீரியலை விட்டு விலகினார். அதனைத் தொடர்ந்து அவர் தனது கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் நடிகை ஷாமிலிக்கு தற்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ மிகவும் கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.