விஜய் என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்! அவர் விஷவளையத்தில் உள்ளார்! நடிகர் விஜய்யின் தந்தை பரபரப்பு பேட்டி!
இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜய் குறித்தும், தான் புதிதாக துவங்கியுள்ள கட்சியை குறித்தும் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்த செய்தி பரவியநிலையில் நடிகர் விஜய் அரசியலில் இணைந்துவிட்டதாக தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் நடிகர் விஜய், அது தனது தந்தை தொடங்கிய கட்சி. அதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மேலும் எனது ரசிகர்கள் என் தந்தை கட்சித் துவங்கிவிட்டார் என்பதற்காக அக்கட்சியில் இணையவோ, கட்சிப் பணியாற்றவோ தேவையில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் எனது பெயர், புகைப்படம் மற்றும் தமது மக்கள் இயக்கத்தின் பெயரை பயன்படுத்தினால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ சந்திரசேகர், நடிகர் விஜய்க்கு எது நல்லதோ அதையே நான் இப்போதும் செய்துள்ளேன். எனது கட்சியில் விஜய்யின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார். அவர் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்.
விஜய்க்கே தெரியாத ரகசியம் ஒன்று அவரை சுற்றி நடந்துகொண்டுள்ளது. விஜய் தற்போது ஒரு சிறிய விஷ வளையத்தில் சிக்கியுள்ளார் அவரை காப்பாற்றவே நான் முயற்சி செய்துகொண்டுள்ளேன். விஜய் புத்திசாலி. அவர் விரைவில் அதனை கண்டுபிடித்து விடுவார் எனக் கூறியுள்ளார்.