பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள சச்சின் மகள்! வாவ்.. எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ.!
பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள சச்சின் மகள்! எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ.!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்கி வருபவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். முன்னாள் வீரரான இவர் பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். மேலும் இவர் கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். சச்சின் கடந்த 1995ஆம் ஆண்டு அஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். அர்ஜூன் தனது தந்தை வழியில் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகிறார்.இவர் மும்பை அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் மூத்த மகள் சாரா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். இவரை 15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
இந்த நிலையில் சாரா தற்போது விளம்பர படத்தில் நடித்துள்ளார். இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஆடை நிறுவனத்தின் விளம்பரமான அதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அவர் நடித்த முதல் விளம்பரம் என கூறப்படுகிறது. மேலும் அந்த விளம்பரத்தில் அவருடன் இணைந்து பிரபல மாடல்களான பனிதா சாந்து, தானியா ஷரோப் ஆகியோரும் நடித்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.