வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட சாய் பல்லவி! வேறு வழியின்றி மன்னிப்பு கோரிய துயர சம்பவம்
Sai pallavi asks sorry for not replying
நடிகை சாய் பல்லவி சிறந்த நடன கலைஞர் மட்டுமில்லாமல் சிறந்த நடிகை என்பதை அவர் நடித்துள்ள பல படங்களில் நிரூபிக்கும் விதத்தில் பங்களித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ படம் மலையாள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களை மிக அதிகளவில் கவர்ந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னனி நடிகர்களின் முதல் தேர்வாக சாய் பல்லவி மாறி வருகின்றார்.
நேற்று சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி உள்ளது என்.ஜி.கே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதற்கான ப்ரோமோ வேலையை சாய் பல்லவி முதல் நாளே தனது ட்விட்டர் பக்கத்தில் துவங்கிவிட்டார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் ப்ரோமோவிற்காக சாய் பல்லவி ரசிகர்களுடன் ட்விட்டரில் உறையாட தயாராக இருப்பதாக முதலில் ஒரு ட்வீட்டை பதிவிட்டார். #AskSaiPallavi என்ற ஹேஷ் டேக்கில் ரசிகர்கள் கேள்வி கேட்கலாம் என கூறியதால் பலர் சாய் பல்லவியிடம் பல்வேறு கேளிவிகளை எழுப்பினர்.
ஆரம்பத்தில் ஒருசில கேளிவிகளுக்கு மட்டும் பதிலளித்த சாய் பல்லவி பின்னர் நீண்ட நேரமாக எந்த கேளிவிகளுக்கும் பதிலளிக்கவில்லை. இதனால் எரிச்சலடைந்த ரசிகர்கள் சாய் பல்லவியை திட்டித் தீர்த்துள்ளனர்.
கடைசியில் வேறு வழியின்றி சாய் பல்லவி, "என்னை மன்னித்து விடுங்கள், எனக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் என்னால் முடியவில்லை. எல்லாரும் என்.ஜி.கே படத்தினை தியேட்டரில் சென்று பாருங்கள். அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம்" என ரசிகர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.