விஜய் படத்தில் சர்ச்சை வேடத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Sai pallavin acting as sasikala in AL vijay movie
மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படம் மூலம் தமிழ், மலையாளம், தெலுங்கு என ஓவர் நைட்டில் பிரபலமானார் சாய் பல்லவி. தென்னிந்திய சினிமா முழுவதும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.
தற்போது தனுஷிற்கு ஜோடியாக மாறி 2 படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. சாய் பல்லவி தமிழில் முதலில் நடித்த படம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த கரு. இந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை பிரபல இயக்குனர் AL விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். அதேசமயம் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வேடத்தில் யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் சசிகலா வேடத்தில் சாய் பல்லவி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை படக்குழு இன்னும் உறுதிசெய்யவில்லை.