அடுத்த விவாகரத்து.. ஜி.வி பிரகாஷை தொடர்ந்து இந்த பிரபல நட்சத்திர ஜோடி பிரிய போகிறதா?
அடுத்த விவாகரத்து.. ஜி.வி பிரகாஷை தொடர்ந்து இந்த பிரபல நட்சத்திர ஜோடி பிரிய போகிறதா?
ஜி.வி பிரகாஷ் சைந்தவி ஜோடி விவாகரத்து செய்தியே இன்னும் முடிவுக்கு வராதநிலையில், அடுத்ததாக பிரபல பாலிவுட் ஜோடி சைப் அலி கான் - கரீனா ஜோடி விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தொடரும் விவாகரத்து
சினிமா துறையினர் சிலரிடையே விவாகரத்து என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது. பாலிவுட் தொடங்கி, கோலிவுட் வரை பிரபலமான பல நடிகர் நடிகைகள் சமீபகாலமாக விவாகரத்து செய்துவருகின்றனர். இயக்குனர் விஜய் - அமலாபால் தொடங்கி, தனுஷ் - ஐஸ்வர்யா, சமந்தா - நாக சைதன்யா என தற்போது ஜி.வி பிரகாஷ் - சைந்தவி வரை பல பிரபலங்கள் விவாகரத்து செய்துள்ளனர்.
நடிகர் சைப் அலி - கரீனா விவாகரத்து
இவர்களது விவாகரத்து குறித்து இணையங்களிலும் பல்வேறு தகவல்கள் உலாவந்துகொண்டுதான் உள்ளது. இந்நிலையில் ஹிந்தி நடிகர் சைப் அலி தனது மனைவி கரீனாவை விவாகரத்து செய்யபோகிறாரா என்ற தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் பூகம்பமாய் வெடிக்க தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: மனதை மிகவும் காயப்படுத்துகிறது.. நடிகர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை!! என்ன கூறியுள்ளார்!!
விவாகரத்திற்கான காரணம்
அதற்கு முக்கிய காரணம், நடிகர் சைப் அலி கான் கையில் தனது மனைவி கரீனா என பெயரை டாட்டூ குத்தி இருந்தார். தற்போது அந்த பெயரை நீக்கிவிட்டு திரிசூலமாக மாற்றி இருக்கிறார். கையில் இருந்த பெயரை அழித்தது ஏன்? இருவரும் விவாகரத்து செய்கிறார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓ!! ஜி.வி பிரகாஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்..