நடிகை சாய்பல்லவியின் தங்கையா இது! பாவாடை தாவணியில் செம க்யூட்டாக போட்ட ஆட்டத்தை பார்த்தீர்களா? மனதைக் கொள்ளையடிக்கும் வீடியோ!
சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் தாவணி பாவாடையில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சாய்பல்லவி. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படவாய்ப்புகள் குவிய தொடங்கியது.
மேலும் சாய்பல்லவி தமிழில் என்.ஜி.கே மற்றும் மாரி 2 திரைப்படங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் அவர் தற்போது பாவாடை தாவணியில் பாலிவுட் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடியுள்ளார். செம க்யூட் எக்ஸ்பிரசனுடன் தனது அக்காவிற்கு நிகராக பூஜா நடனமாடிய வீடியோ வைரலாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.