"வெற்றிமாறன் இயக்கத்தில் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை" மனம் திறந்த சாக்ஷி அகர்வால்.!
வெற்றிமாறன் இயக்கத்தில் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை மனம் திறந்த சாக்ஷி அகர்வால்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால், முன்னதாக தமிழில் சிறிய படங்களில் நடித்து வந்தார். அடுத்து இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை' படத்தில் ஆக்சன் நாயகியாக நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் வெளியான "பஹீரா" படத்தில், நெகடிவ் ரோலில் வில்லியாக நடித்திருந்தார். தற்போது சாக்ஷி 'என் எதிரே ரெண்டு பாப்பா' என்ற படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். இப்படம் ஓ டி டி யில் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஒரு பேட்டியில், "பிக்பாஸ் என்னை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தது. இப்போது நான் மிகவும் கவனமாக படங்களை தேர்ந்தெடுக்கிறேன். நடிப்பது என் கனவு. ஒரே மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்பவில்லை.
தற்போது நான் டான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்கு பயிற்சி பெற தனியாக கிளாஸ் போய் கொண்டிருக்கிறேன். எனக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது" என்று சாக்ஷி அகர்வால் கூறினார்.