அடேங்கப்பா! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சல்மான் கான் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
Salman khan bigg boss salary
தமிழில் பிக்பாஸ் மூன்று சீசன்கள் தற்போதுவரை முடிந்துள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் ஒளிபரப்பாகிவருகிறது. தமிழில் நடிகர் கமலஹாஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.
ஹிந்தியில் பிரபல நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். இதுவரை 12 சீசன்கள் முடிந்து 13 வது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மேலும் 5 வாரங்கள் நீடிக்க நிகழ்ச்சி குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதுவரை ஒரு எபிசோடுக்கு, அதாவது ஒரு வாரத்திற்கு சல்மான்கான் 6.5 கோடி சம்பளம் வாங்கியதாகவும், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள 5 வாரங்களுக்கு கூடுதலாக 2.5 கோடி அதாவது 8.5 சம்பளம் வாங்குவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் ஒரு சீசனை தொகுத்து வழங்குவதன்மூலம் சல்மான் கான் 200 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.