இதெல்லாம் தேவையா?? பீஸ்ட் பட நடிகையிடம் பல்ப் வாங்கிய சல்மான் கான்! வைரலாகும் வீடியோ!!
இதெல்லாம் தேவையா?? பீஸ்ட் பட நடிகையிடம் பல்ப் வாங்கிய சல்மான் கான்! வைரலாகும் வீடியோ!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். அவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் தற்போது DubaiExpo2020 வீடியோவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கான், அவரது நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கிக் படத்தில் இடம்பெற்ற Jumme Ki Raat என்ற பாடலுக்கு பீஸ்ட் பட நடிகையான பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
சல்மான் கிக் படத்தில் வரும் Jumme Ki Raat பாடலுக்கு ஹீரோயின் ஜாக்குலின் பெர்னான்டஸ் அணிந்திருக்கும் ஸ்கர்ட்டை பல்லால் கடித்துக்கொண்டு நடனமாடியிருப்பார். அதேபோல துபாயில் நடந்த நிகழ்ச்சியிலும் பூஜா ஹெக்டேவுடன் அந்த ஸ்டெப்பை போட முயற்சி செய்ய, அவர் நைசாக நழுவி சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில், அதனை கண்ட ரசிகர்கள் சல்மான்கானை கலாய்த்து வருகின்றனர்.