அடேங்கப்பா.. நடிகை சமந்தாவின் சொத்துமதிப்பு மட்டும் இவ்வளவா? கணவரை விட எம்புட்டு அதிகம் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் அதர்வா நடிப்பில் வெளிவந்த பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூல
தமிழ் சினிமாவில் அதர்வா நடிப்பில் வெளிவந்த பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. அதனை தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.
சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்தும் மார்க்கெட் குறையாமல் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதிகளின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அவர்களது மொத்த சொத்து மதிப்பு ரூ.122 கோடியாம். இவற்றில் சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.84 கோடி எனவும், நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு ரூ.38 கோடி எனவும் கூறப்படுகிறது.