விஜய்க்கு இருக்கும் திறமைக்கு அவர் இப்படி நடிக்கலாம்.! மனம் திறந்தார் பிரபல நடிகை.!
விஜய்க்கு இருக்கும் திறமைக்கு அவர் இப்படி நடிக்கலாம்.! மனம் திறந்தார் பிரபல நடிகை.!
சென்ற 2014 ஆம் வருடம் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தில் முதல் முதலாக விஜய், சமந்தா உள்ளிட்ட இருவரும் ஜோடி சேர்ந்தனர். அப்போதிருந்த காலகட்டத்தில் இந்த ஜோடியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதன் பிறகு கடந்த 2016 ஆம் வருடம் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படத்திலும், மெர்சல் திரைப்படத்திலும் இந்த ஜோடி மீண்டும் இணைந்தது. ஆனால் தற்போது மறுபடியும் இந்த ஜோடி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான், நடிகை சமந்தா அண்மையில் ஒரு பேட்டியை வழங்கியிருக்கிறார். அந்த பேட்டியில், நடிகர் விஜய்க்கு இருக்கும் திறமைக்கு அவர் சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் எனவும், அந்த திரைப்படத்தில் நான் சூப்பர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது.