ஊரடங்கால் வீட்டில் இருக்கும் நடிகை சமந்தா செய்துள்ள வேலையை பார்த்தீர்களா! அசத்தல் முயற்சியால் குவியும் வாழ்த்துக்கள்!
Samantha farming in house whole curfew
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி, பாதிப்புகள் மற்றும் பலிஎண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கோரத்தாண்டவமாடி வருகிறது. இத்தகைய கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஐந்தாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடிகர் நடிகைகள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். மேலும் பலர் புகைப்படங்களை வெளியிடுவது, டிக் டாக் வீடியோக்களை வெளியிடுவது என எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா கொரோனோவால் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், அவர் வீட்டின் மொட்டை மாடியில் விவசாய பண்ணை ஒன்றை அமைத்துள்ளார். அதில் அவர் வகைவகையான கீரைகள், காய்கறிகள் என பலவற்றையும் பயிரிட்டு கண்காணித்து வருகிறார். மண்ணை தோண்டி விதைகளை நடுவதால் உங்களது இதயத்திற்கு சந்தோஷம் கிடைக்கும் என கூறும் அவர் முட்டைக்கோஸ் பயிர் செய்து அதை அறுவடையும் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், இதனைக் கண்ட ரசிகர்கள் அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.