அடேங்கப்பா! நடிகை சமந்தா அணிந்திருந்த செருப்பின் விலை எவ்வளவு தெரியுமா?
Samantha heals rate goes viral
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் சமந்தா.
பானா காத்தாடி படத்தை தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துவிட்டார் சமந்தா. அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகையாக இவர் நடித்த யு டர்ன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதும், கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா.
அந்த வகையில் கடந்த வாரம் அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில் சிகப்பு நிற உடை அணிந்து காலில் உயரமான ஹீல்ஸ் அணிந்து போஸ் கொடுத்திருந்தார் சமந்தா. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் அந்த புகைப்படத்தில் சமந்தா அணிந்திருந்த உயரமான ஹீல்ஸ் விலை சுமார் 98 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
சமந்தா அணிந்திருந்த அந்த ஹீல்ஸ் Manolo Blahnik என்னும் உயர்தர மாடலை சேர்ந்தது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.