விஜய் சேதுபதியால் மிரண்டு போன நடிகை சமந்தா.!
விஜய் சேதுபதியை தாறுமாறாக.. பேசிய சமந்தா.?!
சாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பார்சி வெப் சீரிஸ் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கள்ள நோட்டு புழக்கம் பற்றிய கதையைப் பின்புலமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் தமிழ் இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாகி ஓடிடி தளத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த தொடரில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.
ஃபேமிலி மேன் மற்றும் ஃபேமிலி மேன் 2 ஆகிய வெப் சீரிஸ் மூலம் பிரபலமான இயக்குனர்கள் டிகே மற்றும் ராஜ் ஆகியோர் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸ் கிரைம், திரில்லர் கதை களத்தில் பயணிக்கிறது. இந்த வெப்சீரிஸை ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வெகுவாக பாராட்டியுள்ள நிலையில் நடிகை சமந்தா இந்த வெப் சீரியசை பார்த்துவிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் அதனை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
இது பற்றி பதிவிட்டுள்ள அவர் பார்சியில் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் திரில்லர் காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வெப் சீரிஸில் இடம் பெற்றுள்ள உரையாடல்களும் குறிப்பாக நகைச்சுவை ஒன் லைனர்கள் மிகவும் ரசிக்கும்படி இருந்ததாக பாராட்டியுள்ளார்.
மேலும், இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களும் தங்களின் கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சமந்தா டி கே மற்றும் ராஜ் எப்போதும் போல எதிர்பார்ப்பை மிகச் சரியாக பூர்த்தி செய்துள்ளனர் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், இந்த தொடரில் விஜய் சேதுபதி சீரியஸான கதாபாத்திரத்திலும் மிகவும் ரசிக்கும்படியான நகைச்சுவையுடன் யதார்த்தமாக நடித்துள்ளதாக பாராட்டி இருக்கிறார். டி கே மற்றும் ராஜ் இதற்கு முன் இயக்கிய பேமிலி மேன் 2 வெப் சீரியஸ் சமந்தா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.