தோழியுடன் ஜாலியாக நீச்சல் குளத்தில் குளித்த சமந்தா.. வைரலாகும் புகைப்படம்.!
தோழியுடன் ஜாலியாக நீச்சல் குளத்தில் குளித்த சமந்தா.. வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார்.
தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வந்த சமந்தா தற்போது தெலுங்கு மொழி சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். தெலுங்கில் சமீபத்தில் வெளியான விஜய் தேவர் கொண்ட நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இது போன்ற நிலையில், மயோசைட்டிஸ் எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு தற்போது திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் இந்த நோய் பாதிப்பிற்காக பல சிகிச்சைகளும் செய்து வருகிறார்.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருந்து வரும் சமந்தா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு தற்போது தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருப்பதை போல் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.