நடிகை சமந்தாவின் இந்த திடீர் முடிவால் ஷாக்கான ரசிகர்கள் - அப்படி என்ன முடிவது!
samantha is preganant now so 1 1/2 years break in cinema industry
தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவைகாதலித்து வந்ததை தொடர்ந்து பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கணவருடன் இணைந்தும் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பெரும் சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தனது சினிமா வாழ்க்கையில் இருந்து ஒன்றரை வருடம் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.