ஷூட்டிங் ஸ்பாட்டில் இரத்த காயங்களுடன் சமந்தா! 'இன்ஸ்ட்டா ஸ்டோரியில்' நெகிழ்ச்சி.!
ஷூட்டிங் ஸ்பாட்டில் இரத்த காயங்களுடன் சமந்தா! 'இன்ஸ்ட்டா ஸ்டோரியில்' வெளியிட்ட நெகிழ்வான வார்த்தைகள்!
தென்னிந்திய சினிமாவின் லேடி ராக்ஸ்டாராக இருப்பவர் நடிகை சமந்தா. சிறிது காலம் மயோசைட்டிஸ் என்னும் நோயினால் படப்பிடிப்புகளில் இருந்து விலகி இருந்த சமந்தா, தற்போது அந்த நோயிலிருந்து மீண்டு உடற்பயிற்சி, படப்பிடிப்புகள் என தனது ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான யசோதா என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. தற்போது சாகுந்தலம் திரைப்படம் இவரது நடிப்பில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பாலிவுட்டின் சிறந்த வெப் சீரிஸ் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி.கே ஆகியோரின் இயக்கத்தில் 'சிட்டாடல்' என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார் சமந்தா. இதற்கான படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
'ஃபேமிலி மேன்' வெப் சீரிஸின் மூலம் புகழ்பெற்றவர்கள் டி.கே மற்றும் ராஜ். இந்த இணையதள தொடரின் இரண்டாவது சீசனில் சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு சமந்தாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். தற்போது இவர்களது இயக்கத்தில் உருவான 'ஃபார்ஸி' என்ற வெப் சீரிசஸும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இயக்கும் புதிய இணையதள தொடரில் சமந்தா மற்றும் வருண் தவான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நைனிடாலில் 8 டிகிரி செல்ஷியஸ் குளிரில் பாக்ஸிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உறைய வைத்தார் சமந்தா. இதைத் தொடர்ந்து தற்போது இவருக்கு, ஆக்சன் காட்சிகளின் போது கைகளில் அடிபட்டு இருக்கிறது. அதனை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்திருக்கும் சமந்தா 'இவை காயங்கள் அல்ல எனது உழைப்பிற்கான பரிசுகள்" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த ஸ்டோரி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.