திடீரென நடிகை சமந்தா ஏன் இப்படி செஞ்சாங்க! வெளியான காரணம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. அவர் அடுத்ததாக குணசேகர் இயக்கத்தில் சகுந்தலை புராணக்கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.
குணசேகர் அனுஷ்கா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த ருத்ரமாதேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை புராணக்கதையில் சகுந்தலையாக நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கபட்ட நிலையில் இறுதியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிக்க நடிகை சமந்தாவிற்கு இரண்டரை கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.
சமந்தா இதற்கு முன் தான் நடித்த படங்களுக்கு 3 கோடி சம்பளம் வாங்கி வந்தார். ஆனால் சகுந்தலை கதாபாத்திரம் தனக்கு பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராணப் படம் என்பதாலும் இப்படத்திற்காக 50 லட்சம் ரூபாய் சம்பளத்தை குறைத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ் மற்றும் தெலுங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.