அட.. தலைவி வேற லெவல்! புதிய பிசினஸை தொடங்கவுள்ள நடிகை சமந்தா! அப்படியென்ன தொழில் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி பின்னர் விஜய்
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி பின்னர் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின்னரும் அவர் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களிலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் கூட இவரது நடிப்பில் தி ஃபேமிலி மேன் 2 என்ற வெப்தொடர் வெளியானது. இந்த தொடரில் சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. மேலும் அவருக்கு அதனை தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் குவிந்தது.
சினிமா துறையில் பிஸியாக இருக்கும் சமந்தா பிரத்யுஷா என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். மேலும் ஈகம் என்ற பெயரில் ஹைதராபாத், ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ஃப்ரீ ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறாராம். பின்னர் அவர் சில மாதங்களுக்கு முன்பு சகி என்ற பெயரில் பெண்களுக்கான டிசைனர்கள் உடைகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நடிகை சமந்தா விரைவில் பெண்களுக்கான நகை மற்றும் அணிகலன்கள் தொடர்பான புதிய பிசினசை துவங்க உள்ளதாகவும் அதற்கான முதல் கட்ட பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் தற்போது தகவல்கள் பரவி வருகிறது.