'8' டிகிரி செல்சியஸ் உறையும் குளிரில், தீவிர உடற்பயிற்சியில் சமந்தா.!
8 டிகிரி செல்ஷியஸ் உரையும் குளிர்! தீவிர பயிற்சி செய்து சமந்தா!
தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சமீப காலமாக மையோஸைட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து மீண்டு வந்து தற்போது படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது நடிப்பில் உருவாகிய சாகுந்தலம் என்னும் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
டிகே மற்றும் ராஜ் ஆகியோரின் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான பேமிலி மேன் என்ற இணையதள தொடர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார் சமந்தா. இந்தத் தொடரில் சமந்தாவின் நடிப்பு மற்றும் ஆக்சன் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
டிகே மற்றும் ராஜின் இயக்கத்தில் சாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடித்த ஃபார்சி என்ற இணையதள தொடர் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜ் மற்றும் டி.கே.வின் இயக்கத்தில் சிடாடல் என்ற புதிய வெப் சீரிஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த வெப் சீரிஸில் வருண் தவான் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கின்றனர்.
இத்தொடர்க்கான படப்பிடிப்புகள் நைனிடால் நகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தப் பகுதியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. அங்கு நிலவும் 8 டிகிரி குளிரில் சமந்தா பயிற்சி செய்யும் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.