இணையத்தில் சமந்தாவின் உருக்கமான பதிவு.. அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்.!
இணையத்தில் சமந்தாவின் உருக்கமான பதிவு.. அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்.!
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியவர் சமந்தா.
தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த சமந்தா, சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியை அடைந்து வந்தன. மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பினால் திரைத்துறையில் இருந்து பிரேக் எடுத்து வருகிறார்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
அதாவது, சமீபத்தில் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான 'காதல் தி கோர்' எனும் படம் வெளியானது. இப்படத்தை பார்த்து விட்டு "சமீபத்தில் நான் பார்த்த மிகசிறந்த படம் இது தான். அதிலிருந்து இன்னும் மீள முடியவில்லை" என்று கூறியுள்ளார். இப்பதிவு வேகமாக பரவி வருகிறது.