"என் முகத்தை லைவில் காட்ட பிடிக்கலை" இன்ஸ்டாகிராம் லைவில் கண்கலங்கிய சமந்தா..
என் முகத்தை லைவில் காட்ட பிடிக்கலை இன்ஸ்டாகிராம் லைவில் கண்கலங்கிய சமந்தா..
நடிகை சமந்தா "மையோசிட்டிஸ்" நோயால் பாதிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. சமந்தா அவர்கள் மிகவும் ஆரோக்கியமாக தன் உடலை பார்த்து கொள்பவர். அப்படி இருக்கையில் சமந்தாவுக்கு மையோசிட்டிஸ் வந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓராண்டுக்கு மேல் சமந்தா மையோசிட்டிஸ் நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா ரசிகர்களுக்கான அறிவுரைகளையும் தன் தற்போதைய உடல் நிலையை பற்றியும் பேசினார் . ஒரு ரசிகர் சமந்தாவின் சருமம் மிக அழகாக இருப்பதாக விமர்சித்தார். அதற்கு சமந்தா அவர்கள் தற்போது நான் இன்ஸ்டாகிராமில் ஃபில்டர் ஆப்ஷனை தேர்வு செய்துள்ளதாகவும் நிஜமாகவே தன் சருமம் பொலிவிழந்து விட்டதாகவும் கூறினார் .
தான் சிகிச்சைக்கு தேவைப்படும் ஸ்டெராய்ட்ஸ் உட்கொள்வதாகவும் அதனால் தன் சருமம்பொலிவிழிந்து விட்டதாகவும் கூறினார். மேலும் சமந்தா என் வாழ்க்கையில் நான் இவ்வளவு பிரச்சினைகளை சந்திப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
ஆனால் தற்போது நான் பொறுமையையும் ,வலிமையின் உச்சத்தையும் அடைந்து விட்டேன். எனவே உங்களாலும் முடியும் எந்த விஷயமானாலும் அதை தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் கையாலுங்கள் என்று தன் ரசிகர்களிடம் கூறினார். மிக விரைவில் சமந்தாவின் அடுத்த வெப் சீரிஸ் வெளியாகும் என்ற செய்தியையும் பகிர்ந்தார்.