என் வாழ்நாள் கனவு நனவாகிவிட்டது.. செம குஷியில் நன்றி கூறிய சமந்தா! யாருக்கு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு திருமணத்திற்குப் பிற
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு திருமணத்திற்குப் பிறகும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் வரலாற்று கதையை மையமாகக் கொண்டு உருவாகும் சாகுந்தலம் படத்தில் சமந்தா நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இதுகுறித்து மிகவும் உருக்கமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் சிறுவயதிலிருந்து விசித்திரமான கதைகளை கேட்டு நம்புவேன். இப்போதும் அதிலிருந்து நான் சற்றும் மாறவில்லை. இப்படி ஒரு சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அந்த கனவை நனவாக்கிய இயக்குனர் குணசேகரன் அவர்களுக்கு நன்றி.
இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் என்னிடம் கூறிய போதே நான் அந்த அற்புத, அழகான உலகத்திற்குள் நுழைந்துவிட்டேன். ஆனால் எனக்கு சற்று பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. அந்த அழகை அப்படியே திரையில் காட்ட முடியுமா? என்ற சந்தேகமும் வந்தது. இன்று அனைவரிடமும் விடைபெற்றவிட்டேன். குணசேகர் சார் என்ற இந்த அற்புதமான மனிதர் மீது எனக்கு மிகுந்த அன்பும், நன்றியுணர்வும் உள்ளது. என்னுள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருக்கிறது. நன்றி சார் என பதிவிட்டுள்ளார்.