"சமையல் மந்திரம் கிரிஜாவா இது!" புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்!
சமையல் மந்திரம் கிரிஜாவா இது! புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்!

நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் கிரிஜாஸ்ரீ. இவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான "தாய் மண்ணின் சாமிகள்" என்ற நிகழ்ச்சியில் தான் தொகுப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து சமையல் மந்திரம், அந்தரங்கம், என்றும் இளமை உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
அந்தவகையில் இரவு நேரத்தில் அந்தரங்க கேள்விகளுக்கு மருத்துவரை வைத்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதில் கூறும் விதமாக ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் "சமையல் மந்திரம்". இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தான் கிரிஜா ஸ்ரீ பிரபலமானார்.
அதே சமயம், இந்த நிகழ்ச்சியின்போது இவர் சில பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார். அதாவது 'இந்த மாதிரி நிகழ்ச்சியை ஏன் தொகுத்து வழங்குகிறீர்கள்?' என்று பலரும் இவரை கிண்டல் செய்துள்ளனர். "எனக்குப் பிடித்த வேலையை செய்கிறேன்" என்று அவர்களுக்கு பதிலளித்துள்ளார் கிரிஜாஸ்ரீ.
இந்நிலையில் கடந்த வருடம் சித்து என்பவரை திருமணம் செய்துகொண்டு சின்னத்திரையை விட்டு விலகிய கிரிஜாஸ்ரீ, தற்போது தன் குழந்தையின் முதல் வருடப் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் "இன்னும் அப்படியே உள்ளார் கிரிஜா' என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.