குழந்தை பிறந்த 5வது நாளிலேயே சமீரா ரெட்டி செய்த காரியம்.! வைரலாகும் புகைப்படத்தை பார்த்தீங்களா!!
sameera reddy 5th day photo from delivery
கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் சமீரா 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.
மேலும் அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில், சமீராவுக்கு சமீபத்தில் அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்து 5 நாள் ஆனநிலையில் அவர் தனது தற்போதைய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் மிகவும் கஷ்டம், அறுவைசிகிச்சை செய்யப்பட்ட தையல்கள் என்னை பைத்தியமாக்குகிறது இரவுகளில் தொடர்ந்து தூக்கமில்லாமல், குழந்தைக்கு உணவளித்து அதனை கவனித்து வருவது பெரும் சவாலாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.