×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கருப்பா, உயரமா இருக்கேனு முதலில் நிராகரிச்சுட்டாங்க!! ஆனால்.. நடிகை சமீரா ரெட்டி கொடுத்த அசத்தல் அட்வைஸ்!

Sameera reddy advise to girls about beauty

Advertisement

தமிழ்சினிமாவில் சூர்யாவுடன், வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சமீரா ரெட்டி. அதனைத் தொடர்ந்து அவர் வேட்டை, வெடி, அசல், நடுநிசி நாய்கள் என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு வங்கமொழி மற்றும் இந்தியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீரா  தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இருகுழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் சமீரா ரெட்டி அடிக்கடி தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்.

மேலும் அவர் பெண்கள் எப்பொழுதும் தங்களது தோற்றம் எப்படி இருந்தாலும் நம்மை நாமே நேசிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கிவருவார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட்டில் ஆரம்பகாலத்தில் என்னை மிகவும் கருப்பாகவும் உயரமாகவும், குண்டாகவும் இருப்பதாக கூறி பலரும் கிண்டல் செய்வர். மேலும் பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்துக்கு கூட நான் சரியாக இருக்க மாட்டேன் என்றும்  கூறுவர்.

அது முதலில் என்னை சோர்வடைய செய்தது. ஆனால் நான் வருத்தப்படவில்லை. அவர்கள் பேசியது எல்லாம் கேட்டு எனக்கு என் மீதான அன்புதான் அதிகரித்தது. எனது முயற்சியால் நான் இந்த நிலைக்கு வந்தேன். ஒரு நடிகையாக இருந்தால் இப்படித்தான் இருக்கவேண்டும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். அது சரியானது அல்ல என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#beauty #Sameera reddy #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story