என் சினிமா வாழ்க்கை மண்ணோடு போனது இந்த நடிகரால்தான்.! புதிய குண்டை போட்டுடைத்த நடிகை சமீரா!!
sameera talk about telungu cinema carreer
கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் சமீரா 2014ஆம் ஆண்டு அக்ஷய என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.
இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பாக உள்ளார்.மேலும் சமீபத்தில் கர்ப்பமாகியுள்ள நேரத்தில் நீருக்கு அடியில் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அதிர்ச்சியளிக்கும் மற்றொரு தகவலையும் சமீரா ரெட்டி கூறியுள்ளார்.
அதாவது அண்மையில் சமீரா பேட்டி ஒன்றில் கூறுகையில், நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு தெலுங்கு திரையுலகில் ஜூனியர் என்.டி.ஆரை தவிர வேறு எந்த ஹீரோவையும் தெரியாது. அதனால் அவருடன் மட்டுமே பேசிப் பழகினேன்.
எங்களுக்கு இடையே வெறும் நட்பு தான் இருந்தது. ஆனால் மக்களோ எங்களை பற்றி வேறு விதமாக தொடர்ந்து பேசினார்கள்.அதாவது சமீராவுக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கும் இடையே தொடர்பு உள்ளதாக பேசினர். அதனால் என் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ளார்.