வாவ்.. செம கியூட்! சாண்டியின் மகனா இது! நல்லா வளந்துட்டாரே! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!
வாவ்.. செம கியூட்! சாண்டியின் மகனா இது! நல்லா வளந்துட்டாரே! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடன திறமையால் அனைவரையும் அசரவைத்து பெருமளவில் பிரபலமானவர் சாண்டி. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.
மேலும் தற்போது சாண்டி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். சில நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி சாண்டி மூன்று முப்பத்தி மூன்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
சாண்டி சில்வியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று சாண்டி தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் சாண்டியின் மகன் நன்கு வளர்ந்து கியூட்டாக இருப்பதாக கூறி வருகின்றனர்.