"சங்கி கெட்ட வார்த்தை இல்லை, நான் ஆன்மீகவாதி.." - விமான நிலையத்தில் விளக்கம் கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
சங்கி கெட்ட வார்த்தை இல்லை, நான் ஆன்மீகவாதி.. - விமான நிலையத்தில் விளக்கம் கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "லால் சலாம்". இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா தனது தந்தையை சங்கி என்று குறிப்பிடுவது மிகுந்த மனவேதனை அளிப்பதாக கவலை தெரிவித்து இருந்தார். சங்கி ஒரு பெரிய கெட்ட வார்த்தை இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இஸ்லாமிய தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீப காலத்தில் ரஜினியின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து பங்கேற்றது, என்று இந்துத்துவ நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அவர் இருக்கிறார் என்று கடும் விமர்சனங்கள் அவர் மீது எழுந்துள்ளன.
இதற்காக விளக்கம் அளித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் "அவ்வபோது சோசியல் மீடியாவில் வரும் பதிவுகளை பார்க்கும் போது ஒரு வார்த்தை அடிக்கடி காதில் விழுகிறது அப்பாவை சங்கி என்று கூறும் அந்த வார்த்தை மிகுந்த வேதனை அளிக்கிறது. எனக்கு முழுவதுமாக அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாது ஆனால் அதை அறிந்து கொண்ட பின் வேதனைப்பட்டேன் ஒரு இயக்குனராக இதை சொல்ல பெருமைப்படுகிறேன் எங்க அப்பா ஒரு சங்கியாக இருந்திருந்தால் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது அந்த தைரியம் ரஜினியை தவிர யாருக்குமே இல்லை" என்று ஐஸ்வர்யா தெரிவித்தார். மேலும் "தனது தந்தையை சங்கி என அழைக்க வேண்டாம்" எனவும் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சங்கி என்ற வார்த்தை கெட்ட வார்த்தை போல சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.