நடிகர் சஞ்சய் தத்தா இது! இப்படி எலும்பும் தோலுமா மாறிட்டாரே! வைரலாகும் புகைப்படத்தால் பெரும் கவலையில் ரசிகர்கள்!
நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் சஞ்சய் தத்தின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் சஞ்சய் தத். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திடீர் மூச்சுதிணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சஞ்சய் தத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு 3ம் கட்ட நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக சிறிதுகாலம் சினிமாவிற்கு இடைவெளி விடுவதாக தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
பின்னர் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் அவர் சமீபத்தில் தனது பிள்ளைகளைக் காண துபாயும் சென்றுள்ளார். இத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் ரசிகை ஒருவர் தற்போது நடிகர் சஞ்சய் தத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் நடிகர் சஞ்சய் தத்தா இது? இப்படி எலும்பும் தோலுமாக மாறிவிட்டாரே என பெரும் கவலை அடைந்துள்ளனர்.